2024 அமெரிக்க கிரீன் கார்டு விசா லாட்டரி இன்று திறக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் இன்று முதல் (அக்டோபர் 05, 2022)முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

கிரீன் கார்டு” என்று அழைக்கப்படும், 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகத்தன்மை விசா திட்டம் இன்று இரவு 09.30 மணி முதல் நுழைவதற்கு கிடைக்கும்.
பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளமான http://dvprogram.state.gov  வழியாகச் சமர்ப்பிக்கலாம்.