மன்னர் மூன்றாம் சார்லஸ் புலம்பெயர்வாழ் இலங்கையரைச் சந்திக்கவுள்ளார்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், பிரித்தானிய முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் வரை பிரித்தானிய வாழ்க்கையில் இந்த சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.