அர்ஜுன மகேந்திரனுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு : மறுத்தார் ஜனாதிபதி.
ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் மறுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிக்கொண்டிருந்த மரிக்கார் எம்.பி, தற்போதைய ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மத்திய வங்கியின் கொள்ளையன் என தற்போதைய ஜனாதிபதி ரணிலை விக்கிரமசிங்கவை விமர்சித்தனர். எமக்குக் கிடைத்தத் தகவல்களின் பிரகாரம், அர்ஜுன மகேந்திரனுடனேயே ரணில் விக்கிரமசிங்க மதிய உணவை சிங்கபூரில் உட்கொண்டிருக்கின்றார் என்றார்.
கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுபோன்ற குற்றச்சாட்டை ஹிருணிகாவும் முன்வைத்திருந்தார். அதேபோல, மரிக்காரும் முன்வைத்துள்ளார்.மரிக்கார் எம்.பி, ஹிருணிக்காவின் அடியொட்டி பயணிக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.