வாழ்க்கைச் செலவுப் பயனாக பிரித்தானிய மக்களுக்கு மேலும் அரச கொடுப்பனவு.

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிசக்தி விலைகளை சமாளிக்க உதவும் 650 பவுண்ட் மானியத்தின் இரண்டாவது பகுதியாகும்.

இதன்படி தெரிவு செய்யப்பட்ட பலன் பெறுபவர்கள் அதனை நேரடியாக அவர்களின் வங்கி, கட்டிட சங்கம் அல்லது கடன் சங்கக் கணக்கில் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணம் செலுத்துதல் தானாகவே இருக்கும் எனவும்இ நவம்பர் 8 மற்றும் 23 க்கு இடையில் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 650 பவுண்ட் மானியம் என்பது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான 1,200 பவுண்ட அரசாங்க ஆதரவு தொகுப்பின் மிகப்பெரிய பகுதியாகும்.

இது அதிகரித்து வரும் விலை உயர்வு குறிப்பாக எரிசக்தி கட்டணங்களை சமாளிக்க உதவும். ஆனால் அதை எதற்காக செலவிட வேண்டும் என்பதில் எந்த விதியும் இல்லை.ஒரு குடும்பம் யுனிவர்சல் கிரெடிட்,வருமான அடிப்படையிலான வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவு வருமானம் தொடர்பான வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு கொடுப்பனவு,வருமான ஆதரவு,வேலை வரி கொடுப்பனவு,குழந்தை வரி,கடன் ஓய்வூதிய கடன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், 650 பவுண்ட் வாழ்க்கைச் செலவுக் கட்டணங்களை பெற தகுதி பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.