கோட்டாபய ராஜபக்ஷ வருமான வரி சட்டத்தை இல்லாமலாக்கிமையே நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம்.
அரசாங்கத்தின் வருமானத்தில் சம்பளம் வழங்குவதற்கும் ஓய்வூதியம் வழங்குவதற்குமே போதுமாக இருக்கின்றது.
அதற்கு காரணம் எமது அரசாங்கத்தில் கொண்டுவந்த வருமான வரி சட்டத்தை கோத்தாபய ராஜபக்ஷ் இல்லாமலாக்கிமையாகும்.
அதனால் மூலாேபாய அபிவிருத்தித்திட்ட சட்டமூலத்தை முழுமையாக இல்லாமலாக்கி, வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு நாடும் வரி நிவாரணம் வழங்குவதாக இருந்தால் அந்த நாட்டுக்கு பிரதானமாக வெளிநாட்டு செலாவணி உயர்வடைந்து செல்லவேண்டும்,
வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படவேண்டு்ம்., அதேபோன்று வரி கிடைக்கவேண்டும்.
இந்த மூன்று விடயங்களும் இருக்குமாக இருந்தாலே ஒரு நாட்டுக்கு வரி நிவாணம் வழங்க முடியும். ஆனால் எமது நாட்டின் வெளிநாட்டு செலாவணி கிடைத்து வருகின்றது.
தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் வரி கிடைப்பதில்லை. வரி கிடைப்பதன் மூலமே உணவு பாதுகாப்பு தன்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
கல்வி, சுகாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். வரி கிடைக்காமையால் நாட்டில் வறுமை நிலை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
அதனால் வரி நிவாணங்கள் வழங்குவதாக இருந்தால் எமது நாட்டின் கல்வி ,சுகாதாரம் தொடர்பில் கருத்தில்கொள்ளவேண்டும்.
எமது கல்வித்திட்டத்தின் ஆராேக்கயத்தன்மையை கவனிக்கவேண்டும். வரி நிவாரணம் வழங்கும்போது எமக்கு கல்வி ஆராேக்கியத்தன்மை கிடைக்கின்றதா என்பதை பார்க்கவேண்டும்.
இன்று பெரிய பாடசாலைகளில் ஒன்லைன் கல்வியே அதிகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான கல்வியில் எந்த ஆராேக்கியத்தன்மையும் இல்லை.
எனவே நாட்டில் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக கடந்த எமது அரசாங்கத்தில் 2017, 18 காலப்பகுதியில் வருமான வரி சட்டம் ஒன்றை கொண்டுவந்தோம். அதன் மூலம் அமைச்சர்களின் அதிகாரத்தை குறைத்தோம்.
நிதி அமைச்சர்கள் தங்களுக்கு தேவையான முதலீட்டாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை இல்லாலாக்கினோம். இதனால் ஒரு வருடத்தில் வரி வருமானம் நூற்றுக்கு 38 வீதத்தால் அதிகரித்தது.
அதேபோன்று வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை 9இலட்சத்தில் இருந்து 15இலட்சம் வரை அதிகரிக்க முடியுமாகியது. இதன் மூலம் நாட்டின் வருமானத்திலும் பார்க்க செலவை குறைக்க முடியுமாகியது.
ஆனால் இன்று அரசாங்கத்தின் வருமானத்தில் சம்பளம் வழங்குவதற்கும் ஓய்வூதியம வழங்குவதற்குமே போதுமாக இருக்கின்றது.
அதற்கு காரணம் நாங்கள் அன்று கொண்டுவந்த வருமான வரி சட்டத்தை கோத்தாபய ராஜபக்ஷ் இல்லாமலாக்கினார். அதனால் அரசாங்கம் மூலாேபய அபிவிருத்தி தட்ட சட்டமூலத்தை முழுமையாக இல்லாமலாக்கி, வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டத்தை அமைக்கவேண்டும் என்றார்.