நுவரெலியா மார்கஸ்தோட்ட கீழ் பிரிவுவில் சிறுவர் தின கொண்டாட்டம்.

செ.திவாகரன்

மார்கஸ்தோட்டம் கீழ்ப்பரிவு கருமாரியம்மன் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் மார்கஸ்தோட்டம் கீழ்ப்பரிவு கருமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலையின் சிறுவர் தின விழா ஞாயிற்றுக்கிழமை 02 ஆலயத்தில் நடைபெற்றது

இதன் போது ஆலய நிர்வாக சபையின் அழைப்பில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராமன் வினோத்ஜி அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கல்வி கற்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்வதற்கு பூரண உதவிகளை செய்து கொடுப்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அந்தோனியார் பாடசாலையின் அதிபர் ஜெயகாந்தன் அவர்களும் கிராம அலுவலர், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்