பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் ரணில் இரு தரப்பு பேச்சுவார்த்தை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் தலைநகர் மணிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெறுகிறது.

இதேவேளை, இன்று மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது ஆளுநர் கூட்டத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.