ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்கள்
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள டொக்கியோ நகரின் பிரபல நட்சத்திர ஹோட்டலின் முன்பாக ஒன்று திரண்ட இலங்கையர்கள், ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜப்பான் வாழ் இலங்கையர்களை எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.