கோட்டாபய ராஜபக்ச முடிவை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை:நாமல் ராஜபக்ச.
மக்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவை எனவும், அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, இதனைத் தெரிவித்தார்.தமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும், ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை. உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 350 ரூபாவுக்கு மக்களுக்கு உரம் வழங்கினார்.
ஆனால் கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உர இறக்குமதியை நிறுத்தி இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்தார். இந்த முடிவை அமைச்சரவையில் மாற்ற முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை என அவர் தெரிவித்தார்