சதொசவில் 5 பொருட்களின் விலை குறைப்பு.

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பானது நேற்று (22) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விலை திருத்தத்தின்படி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் புதிய விலை 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் புதிய விற்பனை விலை 278 ரூபாவாகும்.

185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 179 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.