புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் புலம்பெயர் அலுவலகத் திட்டம் நிறுவப்பட்டு பின்னர் வெளிவிவகார அமைச்சின் கீழ் மாற்றப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார்.பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்துகொள்ளுமாறு அங்கு வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில் எதிர்கால சவால்களை வெல்வது குறித்தும் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.இந்த சந்திப்பில் இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவும் கலந்து கொண்டார்.இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 2048 ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஐஆகு உடன் நாங்கள் ஏற்கனவே விவாதங்களை ஆரம்பித்துள்ளோம்இ ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் உள்ளது. இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, நாம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதாவது 2048 ஆம் ஆண்டுக்கு 25 வருடங்கள் தேவை. அப்போது நாம் 100 வயதாகி விடுவோம், அதற்குள் நாம் ஒரு வளமான சமுதாயமாக இருப்போம்’ என்று ஜனாதிபதி கூறினார்.