ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணிதிரள்வதற்காக அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளதுடன், தலைநகர் மொஸ்கோவில் எதிர்ப்பாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர 300 ஆயிரம் துருப்புக்கள் வரவழைக்கப்படும் என கிரெம்ளின் அறிவித்ததை அடுத்து ரஷ்ய தலைநகரின் தெருக்களில் மக்கள் போராட்டம் வெடித்தது. ஆயுதமேந்திய பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிலர் இழுத்துச் செல்லப்பட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் போர் வேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

புதன்கிழமை இரவு நாடு முழுவதும் 38 நகரங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 1,348 பேரில் மாஸ்கோவை சேர்ந்தது 300 பேர் அடங்குவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை அசாதாரண தைரியம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யர்கள் பல ஆண்டுகளாக அரசாங்க எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டதற்காக தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பை எதிர்கொண்டுள்ளனர் ஆனால் பிப்ரவரி 24 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்கள் இராணுவ தணிக்கையால் அமைதிப்படுத்தப்பட்டனர்.