சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு.

செ.திவாகரன்

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் சபையின் ஆயுட்கால அங்கத்தவரும் முன்னால் இராஜாங்க அமைச்சருமான கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில், மாண்புமிகு தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டும், இலங்கை பொலிஸ் தினைக்களத்தின் 156வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் நேற்றையதினம் வியாழக்கிழமை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஹட்டன் உதவி பொலிஸ் கண்கானிப்பாளர் திரு.பிரியந்த விக்ரமநாயக்க, தலைமை காவல் கண்கானிப்பாளர் திரு.ரஞ்சித் ஜெயனே, நுவரெலியா இரத்த வங்கி பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் D.S.T.செனவிரத்ன, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நிர்வாக பிரிவின் பணிப்பாளர் திரு.P.சக்தியவேலு, அபிவிருத்தி பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு.J.தியாகராஜா, முகாமையாளர் திரு.V.ஜீவானந்தராஜா, ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளர் திரு.விஜேசிங், நோர்வூட் விளையாட்டு அரங்கின் வதிவிட முகாமையாளர் திரு.கெப்ரியல் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.