-கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோருக்கு பிணை.

தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், நேற்றுக் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் மயூரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள, தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றமைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவு காவல்துறையில் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.