இந்தியா அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அப்போது இருந்துள்ளது. இந்தியா அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ளது அதுதான் உலக நாடுகளில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுவலிமை ஒற்றுமை சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவில் உள்ளது அதுதான் இந்தியாவின் வலிமை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் சுதந்திர 75 ஆவது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கண்காட்சி மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமை வகித்தார்புகைப்பட கண்காட்சியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் இதன் பின்னர் விழாவில் பேசிய அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அப்போதே பெண்கள் பங்களிப்பு அதிக அளவில் இருந்தது என்பதை இந்த புகைப்படக் கண்காட்சி மூலமாக அனைவரும் அறிய முடிகிறது.

இந்தியா அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ளது அதுதான் உலக அளவில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது வலிமை ஒற்றுமை சகிப்புத்தன்மை ஆகியவை இந்திய மக்களிடம் உள்ளது நாம் யாரிடமும் சண்டைக்கு போக மாட்டோம் ஆனால் சண்டை வந்தால் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நமக்கு தெரியும் என்று அவர் பேசினார்