10 ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசிய அமைச்சரவை அனுமதி.
10 ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளதாக சன் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு முதலாளிகளையும் வணிகங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என சரவணன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது நாட்டின் பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.