யாழ்ப்பாணம்-உலக சமாதான தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி.

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமைஅமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதன் போது பெண்கள் அமைப்பினர் பெண் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டிலே சாந்தி சமாதானத்தை நிலை நிறுத்துவதோடு நாடு அமைதியாக செயல்பட அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இதன் போது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையும் வலியுறுத்திய பதாதைகளைத் தாங்கியவாறு பெண்கள் யாழ்ப்பாண வீதியின் ஊடாக அமைதிப் பேரணியாக வலம் வந்தனர்.