உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடம்.
உணவுப் பணவீக்க புள்ளிவிவரங்களுக்கு அமைய உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்திலும், பெயரளவு உணவுப் பணவீக்க அடிப்படையில் நான்காவது இடத்திலும் இருப்பதாக உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 செப்டம்பர் மற்றும் 2022 ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையிலான புள்ளிவிவரங்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக பெயரளவு பணவீக்கம் உள்ள நாடுகளில் சிம்பாப்வே, லெபனான் மற்றும் வெனிசுவேலா ஆகியவை முதல், இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளாவிய ரீதியில் 205.1 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடி அல்லது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரை சோமாலிய வளைகுடா பகுதிக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிக்கை எச்சரித்துள்ளது.