• Tuesday, February 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் மக்களுக்கு பாதிப்பு

By Admin Last updated Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.

“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால், ஒட்டுண்ணி தொற்று, நுரையீரல் தொற்று, பக்டீரியா மூளைக்காய்ச்சல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பூஞ்சை தொற்று மற்றும் பக்டீரியா (இரத்த ஓட்டத்தில் பக்டீரியா) உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்க முகம் கொடுக்க நேரிடலாம்.”

நோயாளர்களிடமிருந்து தொற்றுக்குள்ளான கழிவுகளை அகற்றும் பணி தனியார் துறை நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ தொற்று கழிவுகளை அகற்றுவதற்கு நூறு ரூபா பணம் போதாது எனவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தத் தொகை 2017ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது, அப்போது ஒரு லீட்டர் டீசலை 85 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும். மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனம்  ஒப்புக்கொண்ட விலையை அரசு உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.”

Catchup shows

கழிவுகளை அகற்ற தேவையான டீசல் விநியோகம் கிடைக்காததாலும், நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாலும், கடந்த வாரம் பல வைத்தியசாலைகளில் நோய்த்தொற்று கழிவுகள் குவிந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைக்கு தீர்வு வழங்கப்படாததாலும், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றாக தனியார் மயமாக்கப்பட்டதாலும், வைத்தியசாலை மட்டத்தில் கழிவுகளை குவிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர் மேலும் தெரிவிக்கின்றார்.

Prev Post

எதிர்ப்பாளர்களை ஒடுக்க ‘PTA அவசியம்’

Next Post

பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

தமிழக அரசு  லெட்டர் எழுதினா மட்டும் போதுமா: மீனவர்கள்…

Feb 16, 2026

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத்…

Feb 16, 2026

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பலியான மன்னார் இளைஞன்:…

Feb 16, 2026

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா தூண்டுதல்

Feb 16, 2026

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால்…

Feb 16, 2026

ஐஎம்எப் இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…

Feb 16, 2026

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பதவி நீக்கம்…

Feb 16, 2026

க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026)

Feb 16, 2026

தேசிய பெண்கள் ஆணைக்குழு செயலிழப்பு மற்றும் பாதுகாப்பு…

Feb 16, 2026

நாட்டில் பாதாள உலக ஆட்சியை உருவாக்க முற்படும் அரசாங்கம்:…

Feb 16, 2026
Prev Next 1 of 64
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.