• Saturday, July 11, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் மக்களுக்கு பாதிப்பு

By Admin Last updated Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.

“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால், ஒட்டுண்ணி தொற்று, நுரையீரல் தொற்று, பக்டீரியா மூளைக்காய்ச்சல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பூஞ்சை தொற்று மற்றும் பக்டீரியா (இரத்த ஓட்டத்தில் பக்டீரியா) உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்க முகம் கொடுக்க நேரிடலாம்.”

நோயாளர்களிடமிருந்து தொற்றுக்குள்ளான கழிவுகளை அகற்றும் பணி தனியார் துறை நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ தொற்று கழிவுகளை அகற்றுவதற்கு நூறு ரூபா பணம் போதாது எனவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தத் தொகை 2017ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது, அப்போது ஒரு லீட்டர் டீசலை 85 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும். மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனம்  ஒப்புக்கொண்ட விலையை அரசு உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.”

Catchup shows

கழிவுகளை அகற்ற தேவையான டீசல் விநியோகம் கிடைக்காததாலும், நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாலும், கடந்த வாரம் பல வைத்தியசாலைகளில் நோய்த்தொற்று கழிவுகள் குவிந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைக்கு தீர்வு வழங்கப்படாததாலும், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றாக தனியார் மயமாக்கப்பட்டதாலும், வைத்தியசாலை மட்டத்தில் கழிவுகளை குவிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர் மேலும் தெரிவிக்கின்றார்.

Prev Post

எதிர்ப்பாளர்களை ஒடுக்க ‘PTA அவசியம்’

Next Post

பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இலங்கை – இந்திய ஊடக உறவுகளை வலுப்படுத்தும் ‘ஊடக…

Jul 11, 2026

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்துக்களை…

Jul 11, 2026

கம்பஹாவில் கொழும்பை விட டெங்கு பரவல் அதிகரிப்பு: நாடு…

Jul 10, 2026

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு:…

Jul 10, 2026

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5 கோடி நஷ்டம்:…

Jul 10, 2026

கோட்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு: 2029…

Jul 10, 2026

சுரேஷ் சலேவுக்கு ஆதரவான இடைக்கால மனுக்கள் 17ஆம் திகதிக்கு…

Jul 10, 2026

போகாம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசாங்கம்…

Jul 10, 2026

சிறைச்சாலையில் மோதல்: “அமைச்சரின் திட்டமிடல் அல்ல, இது…

Jul 10, 2026

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை…

Jul 9, 2026
Prev Next 1 of 179
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.