மாணவர்களின் விளையாட்டுக்காக பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டும்-அமைச்சர் ரொசான் ரணசிங்க
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.