பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளராக ரஞ்சித் பண்டாரவின் பெயர் பரிந்துரை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் கோப் குழுவின் தலைவர் பதவிக்கும் ரஞ்சித் பண்டாரவை பொதுஜன பெரமுன பரிந்துரை செய்துள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆளும் தரப்பில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதால் அவரை கட்சி தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி, அவருடன் சுயாதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவை தவிசாளராக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் கோப் குழுவின் தலைவர் பதவிக்கும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளன.
கட்சி நடவடிக்கை குறித்து அதிக அவதானம் செலுத்துவதால் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள நிலையான அமைச்சரவையில் எவ்வித அமைச்சுக்களையும் கோரவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரிவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 6 ஆவது மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது கட்சியின் முக்கிய பதவிகள் தொடர்பான தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.