ரயிலுடன் கார் மோதி விபத்து : சாரதி உயிரிழப்பு.

ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த, நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயிலுடன் யாகொட உப நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில்  கடவையால் பயணித்த கார் ரயிலுடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.