ஒரே நாளில் தாமரைக் கோபுரத்தின் வருமானம் 1.5 மில்லியன்.

கொழும்பில் அமையப்பெற்றுள்ள தாமரைக் போபுரத்தின் சில பகுதிகள் நேற்றையதினம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டன.இவ்வாறு பொதுமக்களின் பாவனைக்காக திறக்கபட்ட தாமரைக் கோபுரத்தின் மூலம் ஒரு மில்லியனுக்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது.

தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிரசாத் சமரசிங்க இது குறித்து தெரிவிக்கையில்,

தாமரைக்கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட முதல் நாளில் 1.5 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

நேற்றையதினம் மாத்திரம் தாமரைக் கோபுரத்தை பார்வையிட 2,612 இங்கையர்களும் 21 வெளிநாட்டு பிரஜைகளும் வருகை தந்துள்ளனர்.

தாமரைக்கோபுரம் தெற்காசியாவிலேயே மிவுகம் உயரமான கோபுரமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், தாமரைக்கோபுரத்தை மக்கள் பார்வையிட வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.