யாழ்ப்பாணத்தில் வாடகை அடிப்படையில் வாள்களை விநியோகித்த நபர் கைது.

யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு வாடகை அடிப்படையில் வாள்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை முருகன் கோவிலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.