பிரித்தானியாவின் மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரங்கல்.
பிரித்தானியாவின் மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தேச தேசிய சபையை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதித்ததன் பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.