13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும்-இந்தியா

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார்.