நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை.
போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது . மேலும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்
கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.