கைது செய்யப்பட்ட நடிகை தமித்தா அபேரத்னவிற்கு விளக்கமறியல்.

போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமித்தா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.