எரிவாயு சிலிண்டரின்புதிய விலை அறிவிப்பு!

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில்  விலை குறைப்பு தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த விலை குறைப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்கமைய, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 551 ரூபாய் ஆகும்.

அதேபோல 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ஆயிரத்து 827 ரூபாய் ஆகும்.

மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 21 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, புதிய விலை 848 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.