பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார்.

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று 49 வயதில் காலமானார்.  இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். எந்திரன் 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.