அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அறிவிப்பு.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.