79 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பம்.

புதிதாகப் பதிவு செய்வதற்கு 79 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த 79 விண்ணப்பங்களில் 35 விண்ணப்பங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 44 கட்சிகளின் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.