ஈராக்கில் அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்றது போல ஈராக்கில் அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
நேற்று (29) இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இதில் 8 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
ஈராக்கின் மிகவும் சக்திவாய்ந்த சியா இன மூஸ்லீம் தலைவர் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததை தொடர்ந்தே அவரின் ஆதரவாளர்கள் அரச தலைவர் மாளிகை உட்பட கிறீன் பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பல கட்டிடங்களை கைப்பறியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் சதர் கட்சி அதிக ஆசனங்களை பெற்றபோதும், அவர்களால் ஆட்சியை அமைப்பதற்கு உரிய பெரும்பான்மையை பெறமுடியவில்லை. ஈரானின் ஆதரவு கொண்ட சியா இன மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியும் ஆதரவுகளை வழங்க மறுத்து வருகின்றது.