ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானம்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், 51 சதவீத உரிமையை அரசாங்கம் வைத்துக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தேவையான விலைமனுக்களை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த செயற்பாட்டினால் ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடனை செலுத்தி, முடிந்தவரை கடனில் இருந்து விடுபட முடியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.