தங்கம் கடத்தலில் 9 இலங்கை பிரஜைகள் கைது

சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கை பிரஜைகள் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஹைதராபாத் சுங்கத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான ருடு-175 இல் வந்த ஒன்பது பயணிகளை இடைமறித்து, நூதனமாக முறையில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டறிந்தனர்.

மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 7.304 கிலோ ஆகும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 450-700 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் கடந்த மாதமும் ஹைதராபாத் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது