காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் குறித்து குஷ்பூ ட்வீட்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும்இ ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் அறிவித்திருந்தார்.

காங்கிரஸுடனான எனது அரை நூற்றாண்டு பழமையான தொடர்பைத் துண்டிக்க முடிவு செய்துள்ளேன் என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், என்னை நம்புங்கள், இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் சொல்கிறேன். இது காங்கிரஸின் முடிவின் ஆரம்பம். மூழ்கும் இந்த படகை யாராலும் காப்பாற்ற முடியாது  என்ற பதிவிட்டுள்ளார்.