கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளா விட்டால் தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு தரமாட்டோம்: செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

தங்களது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தாம் ஒருபோதும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தரமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘ஏற்கனவே தாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும், தொடர்ச்சியாக பயமுறுத்தலும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்துகொண்டு பல இளைஞர்களை கைது செய்வதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது என்றுமு; சுட்டிக்காட்டினார்.

தங்களை பொறுத்தமட்டில் ஜனாதிபதிக்கும் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றோம் என்றுமு;, பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முக்கியமான விடயங்கள் வருகின்ற போது நிச்சயமாக தாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்பதனை குறிப்பிட்டதோடு தொடர்ச்சியாக தமிழர் தரப்பிலே கைது செய்யப்படுகின்ற நிலைமைகளும் கூடுதலாகவே காணப்படுகின்றது. இந்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்  தெரிவித்தார்.