பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கவலை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.