பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே CID பிரிவிடம் ஒப்படைப்பு

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீதான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசுக்கு எதிராக ஏதேனும் சதியில் ஈடுபட்டார்களா மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் குற்றத்தடுப்பு பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸ்மா அதிபர் குற்றத்தடுப்பு பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.