கோட்டபாய நாடு திரும்புவது பற்றி தனக்கு தெரியாது:ரணில் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக் ரமசிங்க தெரிவித்துள்ளார்.ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதேவேளை ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் உட்பட மொட்டுக் கட்சியின் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.