சென்னை தினம்: மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தழிழகம்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தான் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து அடுத்த விழா தயாராகி விட்டது. வருடா வருடம் சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படும்.  அது போல இந்த வருடமும் கோலாகலமாக கொண்டாட தமிழக அரசு அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் சென்னை தினத்தை முன்னிட்டு, போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருடா வருடம் சென்னை தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி தொழில் கூட்டமைப்பு மாநாடும் நடைபெறும். அதே போல இந்த வருடமும் பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.