சூர்யா 42 படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளள அவரது 42-வது படத்தின் பூஜை நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

ஜெய்பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்து வருவதால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இடையே வாடிவாசல் படத்திற்காக சூர்யா காளையுடன் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவா இயக்கும் சூர்யாவின் 42 வது படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக நாளை காலை 7 மணி அளவில் சென்னை ராமாபுரத்தில் படத்தின் பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி திரையுலகின் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வெற்றி பழனிச்சாமி மேற்கொள்கிறார்.

ஆதிநாராயணா கதை எழுத, மதன் கார்க்கி வசனகர்த்தாவாக படத்தில் இடம்பெற்றுள்ளார். பூஜையை தொடர்ந்து நாளை மறுநாள் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.