சிறுவர்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் தொடர்பில் விடுக்கப்ட்ட தகவல்

சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை வழங்குபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்களுக்கான பாடநெறிகள் தற்போது இணையத்தளத்தின் ஊடாக ஆரம்பிக்கபட்டதனால், சிறுவர்கள் தொலைபேசி மற்றும் கணனிகளை பயன்படுத்துகின்றனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆகவே, சிறுவர்களை பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.