கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை  விடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று  (19) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.