75 ரூபாய்க்கு விற்பனையாகும் முட்டை 5 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.

முட்டையின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22 திங்கட்கிழமை முதல் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.

தற்போது முட்டை ஒன்று  75 ரூபாய்க்கு  சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.