பல்கலைகழக மாணவர் 16 பேர் பிணையில் விடுதலை.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 19 பேர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

இதன்போதே 16 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.