இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ‘அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட வேண்டும்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வந்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டத்தில் இருக்கிறது. இபிஎஸ் தரப்பு அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில், எடபடியார் தனது ஆதரவாளர்களான செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின் உட்பட முன்னாள் அமைச்சர்கள் உடன் கலந்தாலோசித்து வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில், இபிஎஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீர்ப்பின் முழு விவரம் வந்த பின்னர் தான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து அடுத்த நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது