லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம்: தற்கொலையோ அல்லது கொலையோ என பொலிசார் விசாரணை

லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிய நிலையில் புகைப்படம் வெளியாகியுள்ளது.தேம்ஸ் ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணியின் போது, சடலம் கரையொதுங்கியுள்ளதென கடற் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சடலம் தேடப்பட்டு வந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நீருக்கடியில் சென்று மீண்டும் மேற்பரப்பிற்கு வரத் தவறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.தீயணைப்பு சேவை, ஆம்புலன்ஸ் குழுவினர், கடற்படை தேடல் மற்றும் மீட்பு பிரிவு உள்ளிட்ட அனைவரும் குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.புலனாய்வாளர்கள் அவரது மரணத்தை விவரிக்க முடியாதத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக நினைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவர் அகில கல்லகே என்ற இலங்கை இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக  என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியிருப்பினும் இது தற்கொலையோ அல்லது கொலையோ அல்ல என பிரித்தானிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞரின் உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆழம் தெரியாத இடஙகளில் குளிப்பதற்கு அல்லது விளையாடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.