ஜனநாயக போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாட்டை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

ஜனநாயக போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாட்டை கைவிடுமாறு சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கோட்டா கோ கம போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவராக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார இலங்கையின் பாதுகாப்புத் தரப்பிற்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டக்காரர்களை அடக்கும் இந்த செயற்பாடுகளை இன்றேனும் நிறுத்திவிட்டு இந்த நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலைமைக்கு விடைதேடும் இடத்திற்கு அனுப்ப வேண்டியேற்படும். போராட்டக்காரர்களை தீவிரவாத அல்லது களகக்காரர்கள் என்ற போர்வையில் அடக்கு முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு பதிலடி கொடுக்க நாம் பின்வாங்கப் போவது இல்லை என்பதை நாம் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

இவை அனைத்திற்கும் முகம்கொடுக்கத் தயாரான நிலையிலேயே நாம் போராட்டத்திற்கு வந்தோம். இவைகளுக்கு நாம் அஞ்சப்போவது இல்லை. ஒரு நாடு என்றாலும் இரண்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சந்தர்ப்பத்தில் செல்பி ஒன்றை எடுத்தமை, மாளிகைக்குள் நுழைந்தமை போன்ற விடயங்களைத் தாண்டி, இந்த நேரத்தில் இந்த பாதுகாப்புத் தரப்பிற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதாவது ராஜபக்சக்களால் இந்த நாட்டிற்கு இல்லாமல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை மீண்டும் இந்த நாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அவற்றை மீட்டுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.  திட்டமிட்டு விசாரணைகளை முன்னெடுத்து அந்த பணியை மேற்கொள்ளாமல் அரசியல்வாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் போராட்டக்காரர்களை அடக்கும் வகையில் செயற்படும் பாதுகாப்புத் தரப்பின் செயற்பாடுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். உங்களது பணிக்கானகொடுப்பனவு இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே வழங்கப்படுகின்றது. ஆகவே உங்களுக்கு பொறுப்பு மற்றும் கடமை ஒன்று காணப்படுகின்றது. அதனை சரியாக நிறைவேற்றுங்கள். என்றார்

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.